அதிகாரிகள் அறிவது ! -உண்மையில் விபத்தை ஏற்படுத்தியது பால் வண்டியா,மினி பஸ்ஸா ? விசாரிக்கவும் !

41

நள்ளிரவு நேரம் மாநகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியது, பால் வண்டிதான் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மினி பேருந்து ஒன்றுதான் விபத்தை ஏற்படுத்தியது என சந்தேகம் இப்போது தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை நேரத்தில், ’அந்த பேருந்து நிலையத்தில் ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடக்கிறார்’ என்கிற தகவல் கிடைத்து காவல்துறையினர் அங்கு சென்று பிரேதத்தை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்.

எந்த வாகனம் மோதி அவர் இறந்தார் என்று விசாரித்த காவல்த்துறை, பால் வண்டிதான் இரவு வந்து சென்றது. அப்படியானால் அந்த வாகனம்தான் மோதியிருக்க வேண்டும் என வழக்கை பதிவு செய்தது.

ஆனால் பாதிக்கப்பட தரப்பிலிருந்து ஒரு புது வகையான தகவல் சொல்லப்படுகிறது. ’’அதாவது அன்றைய தினம் இரவு அந்த நபர் மீது மோதி விபத்தில் கொன்றது ஒரு மினி பேருந்துதான். சென்னை பதிவு எண்ணை கொண்டது அந்த பேருந்து.

ஆனால் பேருந்து நிலையத்தில் இருக்கும் எந்த ஒரு சி.சி.டி.வி கேமராவும் செயல்படவில்லை என்பதால் அதை பார்க்க முடியாமல் போனது. பேருந்து நிலைத்துக்கு வெளியில் இருக்கிற கடை ஒன்றின் கேமராவில் பால் வண்டியின் முகப்பு தெரிந்ததை வைத்து அந்த வண்டிதான் விபத்தை ஏற்படுத்தியது என்று முடிவு செய்துவிட்டார்கள்’’ என சொல்கிறார்கள்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் முழு கவனம் செலுத்தி உண்மை எது வென்று விசாரித்து உறுதி படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தகவலுக்கானது மட்டுமே.

LEAVE A REPLY