தூத்துக்குடியில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

17

தூத்துக்குடியில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பரவாமல் தடுக்க திருமண மண்டபம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

’’வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து டெங்கு, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க தூத்துக்குடி மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடு தோறும் களப்பணியாளர்கள் மூலம் கொசுப்புழுக்களின் உற்பத்தி நிலைகள் ஆய்வு செய்து அழிக்கப்பட்டு வருவதோடு வீடு வீடாக சென்று செப்டிக் டேங் போன்றவற்றின் காற்றுக் குழாய்களுக்கு கொசு வலை கட்டும் பணி மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுகாதாரத்ததை பேணும் வகையில் முதற்கட்டமாக திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகள் உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையர் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் மாநகர் நல அலுவலர், சுகாதார அலுவலர்கள் மற்றும் திருமண மண்டபம், திரையரங்குகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தரைகளை 5 % lysol
கொண்டு ஒவ்வொரு நிகழ்வின் சுத்தம் செய்ய வேண்டும், பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களான கதவின் கைப்பிடிகள்,

மாடிகைப்பிடிகள், இருக்கைகள், மேஜைகள் போன்றவற்றை
Surgical spirit கொண்டு சுத்தம் செய்யவும், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் எடுத்துரைக்கப்பட்டதோடு வளாகங்களில் பொது மக்கள் பார்வைக்குத் தெரியும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது

LEAVE A REPLY