எட்டயபுரம் அருகே பாலத்தில் பைக் மோதி இளைஞர் சாவு

12

எட்டயபுரம் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

கீழஈரால் ஆர்.சி. தெருவை சேர்ந்த மரிய மைக்கேல் மகன் சூசை ஜெகன்(23). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பொன்கருப்பசாமி (21) என்பவருடன் மோட்டார் பைக்கில் கோவில்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

எட்டயபுரத்தை அடுத்த இளம்புவனம் பகுதியை கடந்து சென்ற போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் பைக் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சூசை ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது நண்பர் பொன்கருப்பசாமி பலத்த காயமடைந்தார். தகவறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த பொன் கருப்பசாமியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இறந்த சூசை ஜெகனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எட்டயபுரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY