சர்க்கார் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் – சர்க்கார் படம் குறித்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி !

21

சர்க்கார் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சில, அரசியல் மோட்டிவிற்காக எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகேயுள்ள சிந்தலக்கரையில் விளாத்திகுளத்தில் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்பு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம், சர்க்கார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்திற்காக அல்ல, இது அரசியல் மோட்டிற்க்காக காண்பித்துள்ளனர்.
இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. அதற்கும் சம்பந்தமில்லை, சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது.
இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது, நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம், அவங்களாக நீக்கிவிட்டால் நல்லது இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் என்றார்

LEAVE A REPLY