தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3 யூனிட் திடீர் நிறுத்தம் – மின்சாரம் தேவையில்லை என அதிகாரிகள் தகவல் !

12

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3 யூனிட் திடீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்கும் போது, மின்சாரம் தேவையில்லை என்பதால் நிறுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

தமிழக அளவில் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் விகிதம் 5 யூனிட்(அலகு)செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் 1050 மெகாவாட் கிடைக்கிறது.

இந்தநிலையில் இன்று 5-ல் 3 யூனிட் நிறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது ‘மின்சாரம் அதிகமாக இருக்கிறது.அதனால் மின்சாரம் தேவையில்லை என்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் இன்றைய தேவையை பொருத்தவரை 10 ஆயிரம் மெகாவாட் அளவுதான் இருக்கிறது’ என தகவல் சொல்கிறார்கள்.

LEAVE A REPLY