தூத்துக்குடியில் சர்க்கார் படம் பார்த்து விட்டு வீடு திரும்பியபோது விபத்து – ஒரு ரசிகர் பலி மற்றொரு ரசிகர் படுகாயம் !

23

தூத்துக்குடி அருகே விஜய்யின் சர்கார் படம் பார்த்து விட்டு பைக்கில் வீடு திரும்பிய நண்பர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேப்பலோடை ஊரை சேர்ந்தவர் ராமர்பாண்டி மகன் ராஜா(35). குளத்த்தூர் செல்வராஜ் மகன் ராஜா(27). இவர்கள் இருவரும் வேப்பலோடையில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தனர். நேற்று தீபாவளி என்பதால் நண்பர்கள் இருவரும் விஜய் நடத்து வெளியாகியிருக்கும் ‘சர்கார்’ என்கிற படத்தை பார்க்க பைக்கில் தூத்துக்குடிக்கு சென்றனர்.

படம்பார்த்துவிட்டு அதே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது பைக், சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது அவழியாக சென்ற லாரியும் இவர்களது பைக்கும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ராமர்பாண்டி மகன் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த செ. ராஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தருவைகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY