கிங் கோலியை முறியடித்த ரோ‘ஹிட்’ சர்மா நம்பர் 1: ஒர் விசித்திர தற்செயல் மற்றும் சுவாரஸ்யத் தகவல்கள்

16
நம்பர்

லக்னோவில் நேற்று ரோஹித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்களை விளாசினார், இதில் 7 மிகப்பெரிய சிக்சர்களை அடித்து லக்னோ ரசிகர்களைக் குஷிப்படுத்தினார் ரோஹித் சர்மா, ஆனால் இந்த இன்னின்ஸ் மூலம் சில சாதனைகளையும் முறியடித்துள்ளார் ரோஹித்.

முதலில் அதிக டி20 ரன்களை எடுத்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார், கோலியின் 2101 ரன்களைக் கடந்தார் ரோஹித் சர்மா.  தற்போது 2203 ரன்களில் உள்ள ரோஹித் சர்மா, மார்டின் கப்தில் (2271) சாதனைக்கு வெகு அருகில் 2ம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் 4 சர்வதேச டி20 சதங்களை அடித்து சர்வதேச அளவில் நம்பர் 1 வீரராகவும் திகழ்கிறார் ரோஹித் சர்மா, இவர் 3 டி20 சத சாதனையை வைத்திருந்த நியூசிலாந்தின் கொலின் மன்ரோவைக் கடந்தார்

மேலும் ஒரு விசித்திரத் தற்செயலாக ரோஹித் சர்மா அடித்த 4 டி20 சதங்களில் 3 இந்தியாவில் அடிக்கப்பட்டது,  மூன்றுமே புதிய மைதானத்தில் அடிக்கப்பட்ட சதங்களாகும், தரம்சலா, இந்தூர், தற்போது லக்னோ.

மொத்தமாக டி20-யில் ரோஹித் சர்மாவின் 6வது சதமாகும். இதில் கிறிஸ் கெய்ல் பக்கம் ஒருவரும் வர முடியாது, மொத்தம் 21 சதங்களை அடித்துள்ளார். மெக்கல்லம், லூக் ரைட்,  மைக்கேல் கிளிங்கர் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.

ரோஹித் சர்மா 79 இன்னிங்ஸ்களில் 2203 ரன்கள்

விராட் கோலி 58  இன்னிங்ஸ்களில் 2102 ரன்கள்

சுரேஷ் ரெய்னா 66  இன்னிங்ஸ்களில் 1605 ரன்கள்

தோனி 80 இன்னிங்ஸ்களில் 1487

யுவராஜ் சிங் 51 இன்னிங்ஸ்களில் 1177.

ரோஹித் சர்மா 19 முறை டி20 சர்வதேச போட்டிகளில் 50 மற்றும் அதற்கு மேல் ரன்களை எடுத்துள்ளார். இதிலும் விராட் கோலியின் 18, ஐம்பது பிளஸ் ஸ்கோர்களைக் கடந்துள்ளார் ரோஹித் சர்மா.

2018-ல் மட்டும் 69 சிக்சர்களை விளாசியுள்ளார் ரோஹித் சர்மா. ஒருகாலண்டர் வருடத்தில் இவ்வளவு சிக்சர்களை யாரும் அடித்ததில்லை. கடந்த ஆண்டு 65 சிக்சர்களை அடித்திருந்தார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இடையே டி20 சர்வதேசப் போட்டிகளில் 1268 ரன்கள் கூட்டணி. டி20-யில் ஒரு கூட்டணி சேர்த்துள்ள அதிகபட்ச ரன்கள் இது.  டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் தங்களிடையே 1154 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.

LEAVE A REPLY