மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

11
மீனவர்கள்

மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்று வீசக்கூடும் நிலையில், வடகிழக்கு பருவமழை மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தின் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY