அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் – நடுநிலை.காம்

37

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்ளை சொல்லிக் கொள்கிறது நடுநிலை நியூஸுக்கான நடுநிலை.காம்.

ஒவ்வொரு தனி மனித மனதுக்குள்ளும் ஆணவ போக்கு இருக்கிறது. அதுபோல் இந்த உலகில் வாழும் அத்துனை உயிர்கள் மனதுக்குள்ளும் ஆணவ சிந்தனை இருக்கிறது. இது போட்டி வாழ்க்கையின் காரணமாக வருகிறது.

ஆணவ போக்கு இருக்கும் வரை அவரவர் நலனை மட்டுமே அவரவர் போற்றுவர். அடுத்தவர் நலனைப்பற்றி அவர்களுக்கு கவலை இருக்காது. ஆணவ சிந்தனை மறைந்தால் அத்தனை உயிர்களும் தனது சொந்த உயிராகவே பாவிக்க சொல்லும். அந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதன் மனதுக்குள்ளும் விசாலம் கிடைக்கிறது.

விசால மனமற்ற மனிதன் அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுகிறான். அதுவே பலரது அழிவிற்கு காரணமாக அமைகிறது. அப்படிபட்ட விசால மனமற்ற மனிதனை அரக்கன், ஆணவக் காரன் என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள். அப்படிபட்ட அரக்கர்கள் மற்றவர்களுக்கு இடையூறு செய்வது மட்டுமில்லாமல் கூடி வாழும் கூட்டு வாழ்க்கையில் விதிகளை மதிப்பதில்லை. அப்படிபட்ட அரக்கர்கள் அழிக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொருவருடைய மனதுக்குள் இருக்கும் அரக்கத்தனம் அழிக்கப்பட வேண்டும்.

அதை வலியுறுத்தும் வகையில் ஆணவ அரக்கர்களை அழித்த நிகழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். அத்தகைய கொண்டாட்டமே தீபாவளி. அநீதி அழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்கிற பண்பை உயர்த்தி பிடிப்பதே இந்த விழாவுக்கான அர்த்தமாகும். மக்களுக்கு புரிய வைப்பதற்காக பல கதைகள் சொல்வதுண்டு.

பழைய காலத்தில் சொல்லப்பட்ட கதைகள் இப்போதுள்ள காலத்துக்கு முரண்பாடாக தெரியலாம். அதை சொல்லி கொண்டாட்டத்தை குலைக்க கூடாது. இதுபோன்ற கொண்டாட்டங்களே மக்களை இணைக்கிறது. பல்வேறு வழிகளில் மக்கள் பயனடைகிறார்கள்.

பல கோவில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்பட்டது. அதன் தொடர்புடையதாகவே இந்த விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் அறிவியல் இருக்கிறது. ஒரு வகையான சீதோஷநிலையில் இருந்து மற்றொரு நிலை அதாவது மழைகாலத்துக்கு மாற இருக்கும் போதுதான் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

அதுக்காக பல நாட்கள் மக்கள் விரதம் இருக்கிறார்கள். அப்படி விரதம் இருப்பது. மழைகாலத்துக்கு முன்னாடியே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்கிற அடிப்படையில்தான். மழைகாலங்களில் கொழுப்பு அதிகமாக இருந்தால் எளிதில் நோய் தொற்றிக் கொள்ளும். அவற்றை நீக்கிய பின்னர் சத்தான ஆகாரங்கள் தேவை. அதற்கு இதுபோன்ற விழா நடத்தப்படுகிறது.

ஆயுத பூஜை, விநாயகர் சதூர்த்து போன்ற விழாக்களும் அத்தகைய அறிவியல் சார்ந்ததுதான். எனவே விழாக்கள் அத்தனையும் அர்த்தமுள்ளதுதான். அர்த்தமுள்ள விழாக்கள் அவசியம் நடத்தப்பட வேண்டும். விழாக்களை அறிவியல் சார்ந்தே பார்க்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி பயன் பெற வேண்டுகிறது நடுநிலை.காம் !

LEAVE A REPLY