மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது வணிக நிறுவனங்கள் – பாதுகாப்பு விசயத்தில் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறது தூத்துக்குடி போலீஸ் !

20

தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக தூத்துக்குடியிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் ஓரளவு சூடுபிடிக்க தொடங்கியது. இன்று(05.11.2018) பொதுமக்கள் ஆவலாக சென்று பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதனால் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

தூத்துக்குடியை பொருத்தவரை மாநகரம் தவிர முத்தையாபுரம் சுற்றுவட்டார பகுதி மக்களும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதி மக்களும் குளத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்களும் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதி மக்களும் மாநகர் பகுதியில் உள்ள கடைகளில் தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். அந்த படியே பொதுமக்கள் குவிந்திருக்கிறார்கள்.
குறிப்பிடப்பட்ட அந்த பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது.

எனினும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு நாட்களாக பயமுறுத்தி வந்த மழை, சற்று ஓய்வெடுத்ததால் மக்கள் சாதாரணமாக வந்து பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக குவியும் மக்களிடம் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க போலீஸார் செய்திருந்த ஏற்பாடுகள் ஓரளவிற்கு பாஸ்மார்க் போடும் அளவிற்கு இருந்தது. மற்றபடி போக்குவரத்து நெருக்கடி என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

கண்காணிப்பு கேமராவுடன் வாகனம் உலா வருகிறது என்கிற தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த ஒன்றுதான். அந்த தகவல் உண்மையில் பயனளித்திருப்பதாகவே தெரிகிறது.

கேமரா வாகனம் கன்ட்ரோல் ரூம்வுடன் தொடர்பில் இருப்பது திருடர்களை திருந்த செய்திருப்பதாகவே தெரிகிறது. திருட்டு குற்றங்கள் பெரிய அளவில் நடை பெறவில்லை என்கிற தகவல் அதை மெய்ப்பிக்கிறது.
மேலும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ’ஹெலோ போலீஸ்’ என்கிற பெயரில் போன் நம்பருடன் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டும் பொதுமக்களுக்கு தைரியத்தை கொடுத்தது.

கடந்த சில காலமாகவே ’தொழில் டல்’ என சொல்லி வந்த வணிகர்கள், ஓரளவு திருப்தி பெற்றிருப்பதாகவே சொல்கிறார்கள். தீபாவளி வியாபாரம் என்பது தீபாளி அன்றும் நடை பெறும் என்பதால் நாளையும் ஓரளவு எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY