ஆஸ்திரேலியாவின் வெற்றுச் சொற்கள்… நமக்கு வாந்திதான் வருகிறது: ஆஸி. தோல்விக்குப் பிறகு ஷேன் வார்ன் விளாசல்

16
ஆஸி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர்கள் நடத்தையை ஒழுங்கு படுத்தும் செயலில் புதிய சொற்களை கையாண்டு அதனை ஓய்வறையிலும் வாசகங்களாக மாற்றியுள்ளது. இந்தச் சொற்களைக் கேட்டால் நமக்கு வாந்திதான் வரும் என்று ஷேன் வார்ன் கடுமையாக விளாசியுள்ளார்.

அந்த புதிய சொற்கள் இதோ: நாம் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அணி (We are Australia’s Cricket Team), ஆஸ்திரேலியர்கள் பெருமைப்படுமாறு நட (make Australians proud), பொறுமை (Patience), அழுத்தம் (Pressure),ஆகிய 4 வாசகங்கள், இதில் சிக்கல் இல்லை, ஆனால் 5வதாக வைக்கப்பட்டுள்ள வாசகம்தான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது, அது உயர்மட்ட நேர்மை என்ற வாசகம் அதாவது Elite Honesty என்று கூறப்பட்டுள்ளது.

இதனை ஷேன்வார்ன் கடுமையாக விமர்சித்துள்ளார், இது ‘சொற்கழிவு’ என்று வர்ணித்துள்ளார் அவர்.

ஃபாக்ஸ் ஸ்போர்ட்சில் வர்ணனையிலிருந்த ஷேன் வார்ன், “ஒவ்வொரு வடிவத்துக்கும் சிறந்த கேப்டனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர் வீரர்களை தன்னுடன் அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும். அனைத்து வார்த்தைகளையும் வெற்றுச் சொற்களையும் முதலில் மறந்து விடுங்கள். சொற்கழிவுகளை விட்டு உதறுங்கள், மறந்து போங்கள், இவையெல்லாம் குப்பைக் கூளமானவை, நமக்கு வாந்தி வரவழிப்பவை.

நீங்கள் உங்கள் 200 பக்க ஆவணத்தை எழுதலாம், விளையாட்டு அறிவியலை வைத்துக் கொள்ளலாம் உயர் திறச் செயல்பாடு போன்ற முட்டாள்தனமானவற்றையெல்லாம் கொள்கைகள் என்று வைத்துக் கொள்வது படு கேவலமாக உள்ளது. இதில் பெரிய கவலை என்னவெனில் அவர்கள் தாங்கள் சரியாகச் செய்து கொண்டிருப்பதாக வேறு நினைக்கின்றனர். என்ன கொடுமை இது.

ஆஸ்திரேலியர்கள் என்றால் யார் என்பதையோ, அவர்கள் டி.என்.ஏ.வையோ, மறக்கக் கூடாது, அது கடினமான, ஆக்ரோஷமான கிரிக்கெட்டுடன் நேர்மையாக ஆடுவது என்பதே.

கடைசியில் எதற்காக இதெல்லாம் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதற்காகத்தானே…இது செயல்திறன் கொண்ட ஆட்டம், களத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த வார்த்தைகள், எல்லாமும் அதை நோக்கித்தானே…அடிப்படைகளை சரி செய்ய வேண்டும். கேப்டன், துணைக் கேப்டன் வழிநடத்த மற்றவர்கள் அவர்களுடன் செல்ல வேண்டும். களத்தில் ஆட்டத்தின் மூலம் மற்றவர்களுக்கு ஊக்கமாக, உத்வேகமாகத் திகழ வேண்டும். அதை விடுத்து இந்த 200 பக்க ஆவணம், வார்த்தைகள், கவைக்குதவாத பேச்சுகள், களத்தில் இறங்கி நன்றாக ஆடவேண்டும் அவ்வளவுதானே கிரிக்கெட் என்பது.

என்று ஜஸ்டின் லாங்கர், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை விளாசித் தள்ளினார்.

LEAVE A REPLY