அசைக்க முடியா இடத்தில் கிங் கோலி, ரோஹித், பும்ரா: ராயுடு, ஜடேஜா பாய்ச்சல், ஷிகர் தவண் சரிவு

22
அசைக்க

ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அசைக்க முடியா முதலிடத்தில் உள்ளார், யஜுவேந்திர சாஹல்  முதல் முறையாக டாப் 10 பவுலர்கள் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-1 என்று வென்றது, இதில் லெக்ஸ்பின்னர் சாஹல் 4 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து 3 இடங்கள் முன்னேறி டாப் 10 பவுலர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார். சாஹல் 8-ம் இடத்தை இங்கிலாந்தின் ஆதில் ரஷீத்துடன் பகிர்கிறார்.

பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் நங்கூரம் பாய்ச்சியுள்ளார்.  ரவீந்திர ஜடேஜாவுக்கும் தரவரிசையில் புதிய பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 16 இடங்கள் முன்னேறி 25ம் இடத்தில் பவுலர்கள் தரவரிசையில் நிற்கிறார்.

பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 இடத்தில் உள்ளனர். இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சினையை தீர்த்து வைத்ததாக பில்ட் அப் கொடுக்கப்படும் அம்பத்தி ராயுடு 24 இடங்கள் முன்னேறி 48ம் இடம் வந்துள்ளார். ஷிகர் தவண் 4 இடங்கள் சரிந்து 9-ம் இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY