தூத்துக்குடி சிவன் கோவிலில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு !

35
lordshiva

தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து அம்பாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், இரவில் பித்தளை சப்பரத்தில் அம்பாள் வீதிஉலா உள்ளிட்டவை நடைபெற்றன. திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறன்னு அபிஷேகம், வீதி உலா நடைபெற்று வருகிறது.

9-ம் திருநாளான நேற்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சிரப்பு அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேருக்கு முன்னால் நாட்டுப்புற கலைஞர்களின் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்கால்குதிரை, கும்மியாட்டம், சிலம்பாட்டம் நடந்தது. கேரளாவின் செண்டைமேளம் இசைக்கப்பட்டது. கீழரத வீதியில் புறப்பட்ட தேர் தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வடக்கு ரத வீதி வழியாக நிலைக்கு வந்தது.

தேரோட்டத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தி.மு.க வின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, மாநகரசெயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நாளை இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாணமும் இரவு 9.30 மணிக்கு சுவாமி அம்பாள் பட்டணப் பிரெவேசமும் நடைபெறுகிறது.

LEAVE A REPLY