மு.க.ஸ்டாலின் விரைவில் சிறை செல்வார் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ

32
ஸ்டாலின்

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து ஒன்றினைந்த, ஐக்கிய இந்தியாவை உருவாக்கியவர் சர்தர்வல்லபாய் படேல். இதனால் அவரை மக்கள் இன்றளவு இரும்பு மனிதர் என்று போற்றி வருகின்றனர்.

அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாடு முழுவதும் விவசாய பெருமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திய இரும்புகளை சேகரித்து, ஒன்றைலட்சம் டன் மற்றும் 7லட்சம் கிராமங்களில் மண் சேகரிக்கப்பட்டு குஜராத்தில் 3 ஆயிரம் கோடியில் சர்தர்வல்லாய்படேல் சிலை உருவாக்கப்பட்டது இந்தியாவின் ஒற்றுமையை காட்டுகிறது. உலகில் உயர்ந்த சிலையாக இன்று உருவாகி உள்ளது மட்டுமின்றி, விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உலக அதிசயமாக அறிவிக்கப்படும்

என்ற நிலையில் அநத விழாவில் தமிழக அரசு சார்பில் நானும், அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜனும் கலந்து கொண்டு முதல்வர் சார்பில் பாரதமாத நினைவு பரிசு வழங்கினோம், தேர்தல் வந்தால் தினகரன், சீமான் மட்டுமல்ல எல்லோரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவர்கள், 18 எம்எல்ஏக்கள் பிரச்சனை எங்களுக்கு ஒரு அனுபவம், இடைத்தேர்தல் தேவையில்லாமல் வந்துள்ளது, ஜெயலிலதா அடிமட்ட தொண்டர்களுக்கு தான் போட்டியிட வாய்ப்பு அளிப்பார். தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்று அணிக்கு சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள், இனி வேட்பாளர் தேர்வு போது முதல்வர், துணை முதல்வர் கவனமாக செயல்படுவார்கள் என்றும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள், மணல் கொள்ளையர்கள், தொகுதி மக்களை பார்க்காமல் தங்களை வளப்படுத்திக் கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது

,விசுவாசமான , உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ள காரணத்தினால் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம், இடைத்தேர்தல் தேவையில்லாமல் புகுத்தப்பட்டுள்ளது, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது,

இரு தொகுதிகளிலும் உறுதியாக அதிக வாக்கு வித்தியசத்தில் வெற்றி பெறுவோம், நல்ல வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று கூறிய அமைச்சர் லோக் ஆயுத்தா விரைவில் அமைக்கப்படும், திமுக முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வார்கள், சட்டமன்ற விதிமீறல் வழக்கு விரைவில் தீர்ப்புக்கு வர இருக்கிறது அப்போது மு .க ஸ்டாலின் தகுதி இழப்பு நிலை கூட உருவாகலாம், புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கினை கண்டு திமுக அஞ்சுகிறது, அந்த வழக்கில் மு க ஸ்டாலின் சிறை செல்லும் நிலைமை உருவாகும் என்றார்

LEAVE A REPLY