‘தல’ தோனிக்கு 35 அடி உயர கட்-அவுட்: கேரளா தோனி ரசிகர்களின் உற்சாகம்; பரவலாகும் காணொலி

15
தல

இந்திய டி20 அணியிலிருந்து தோனியை நீக்கியது குறித்து தல தோனி ரசிகர்கள் கடும் ஆவேசமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர், சினிமா ரசிகர்கள் போல் எப்படி தங்கள் தலைவன் சொதப்பலான படங்களில் நடித்து படம் வசூலில் சரியாகப் போகாவிட்டாலும் தங்கள் ஸ்டார்களைக் கொண்டாடுவதுதான் இந்திய வெகுஜனக் கலாச்சாரம்.

ஆனால் கிரிக்கெட்டில் ரசிகர்கள் அத்தகைய வழிபாட்டு மனநிலைக்கு முன்னர் சென்றதில்லை, சச்சின், பிறகு தோனி என்று ஒரு வழிபாட்டுக் கலாச்சாரம் மிக மோசமான ஒன்றாக இந்தியாவில் பரவி வருகிறது.

வீடியோ

தோனி, தன் 2 உலகக்கோப்பை வெற்றிகள் மட்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே என்ற பிராண்ட் மூலம் உலகம் முழுதும் தனக்கான ரசிகர்களை வென்றெடுத்துள்ளார், இவர்கள் தங்கள் தலயின் பார்ம் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். எவ்வளவு வயதானாலும் அவர்தான் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்ற பிடிவாத நிலைப்பாட்டில் இருப்பவர்கள். ஆனால் உற்சாக ரசிகர்கள் இவர்கள். இவர்களைப் போன்ற ரசிகர்களால்தான் இந்திய கிரிக்கெட் பிரபலமடைந்து வருகிறது  என்பதும் உண்மை.

இந்நிலையில் நாளை இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே 5வது போட்டி கேரளா, திருவனந்தபுரத்தில் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்துக்கு வெளியே ‘அனைத்து கேரளா தோனி ரசிகர்கள் அமைப்பு’ தோனிக்கு 35 அடி உயர கட்-அவுட் வைத்து உற்சாகத்தை தெரிவித்துள்ளனர்.

சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு கட் அவுட் தயார் செய்வதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

விராட் கோலிக்கு தோனி நிச்சயம் தேவை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருப்பதும், 2019 உலகக்கோப்பையில் தோனி ஆட வேண்டும் என்பதிலும் ரசிகர்கள் தீவிரமாக உள்ள நிலையில் இந்த கட் அவுட் பல கதைகளைப் பேசும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY