தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் குவிந்த அரசியல் தலைவர்கள்; முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் அஞ்சலி

16
தேவர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நேற்று நடைபெற்ற குருபூஜை விழாவை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் திரண்டு மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்னில் முத்துராம லிங்கத் தேவரின் 56-வது குருபூஜை விழா மற்றும் 111-வது ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. தேவர் நினைவிடத்தில் நேற்று காலை 9 மணிக்கு முதல்வர் கே.பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக் கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் சி.விஜய பாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் எம்.மணிகண்டன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, க.பாஸ்கரன், ராமநாதபுரம் எம்.பி. அன்வர்ராஜா, ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட் டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அரசு விழாவாக்கிய எம்ஜிஆர்

அப்போது, முதல்வர் பழனி சாமி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: 1978-ம் ஆண்டு தேவர் குருபூஜை விழாவை அரசு விழாவாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை மூன் றாகப் பிரித்து, சிவகங்கை மாவட் டத்துக்கு பசும்பொன் தேவர் திரு மகனார் மாவட்டம் என பெயரும் சூட்டினார். தேசியமும், தெய்வீக மும் என வாழ்ந்து காட்டிய தேவரின் புகழ் நிலைக்கும் வகை யில் பசும்பொன்னில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிந்து முன்னாள் முதல் வர் ஜெயலலிதா பெருமை சேர்த் தார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி னர். இதையடுத்து திமுக தலை வரும், எதிர்க்கட்சித் தலைவரு மான மு.க.ஸ்டாலின், மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச் சர்கள் ஐ.பெரியசாமி, வ.சத்திய மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், கேஆர். பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, எம்எல்ஏக்கள் மூர்த்தி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, தேமுதிக சார்பில் மாநில கேப்டன் மன்றச் செயலாளர் செல்வ அன்புராஜ், மூவேந்தர் முன் னேற்றக் கழக தலைவர் தர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பல்வேறு சமுதாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஏராள மான பொதுமக்கள் விழாவில் பங் கேற்றனர்.

பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், மொட்டை அடித் தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கூடுதல் டிஜிபி (சட்டம், ஒழுங்கு) விஜயகுமார் தலைமையில் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், 5 டிஐஜிக்கள், 20 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் 10,000 போலீஸார் பசும்பொன் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY