ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் முத்துநகர் பார்வையற்றோர் அறக்கட்டளைக்கு உதவிகள்..

44
ஸ்டெர்லைட் காப்பர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறுசமுதாய  மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சமுதாய மேம்பாடு, மகளிர் மேம்பாடு, விவசாய மேம்பாடு, கல்வி வளர்ச்சி, மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, குளங்கள் தூர்வாருதல், கோவில்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல சமுதாய பணிகளை தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்  முத்துநகர் பார்வையற்றோர் சமுதாயஅறக்கட்டளைக்கு  ரூபாய்  50 ஆயிரம் மதிப்பீட்டில் உதவிகள் வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் காப்பர்

தூத்துக்குடியில் கடந்த 3 வருடங்களாக இயங்கிவரும் முத்துநகர் பார்வையற்றோர்  அறக்கட்டளை  மூலம் சுமார் 60கும் மேற்பட்டகுடும்பங்கள் பயனடைந்து வருகின்றார்.இந்த 60 குடும்பங்களும் வரும்  தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும்  வகையில்ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான  மளிகை பொருட்களை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில்இணை பொது மேலாளர் விமல் ராஜ், கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

ஸ்டெர்லைட் காப்பர்

அவருடன் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனஅலுவலர்கள் சாம் நியூபெகின், தங்கராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். முத்துநகர் பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில் அதன்செயல் தலைவர்  முருகேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY