செல்போனைத் தட்டி விட்ட விவகாரம்: சிவகுமாரை சாடும் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ இயக்குநர்

14
விவகாரம்

செல்போனைத் தட்டிவிட்ட விவகாரம் தொடர்பாக சிவகுமாரை கடுமையாகச் சாடியிருக்கிறார் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ இயக்குநர் லெனின் பாரதி.

மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வரும் போது ஓரமாக நின்ற ரசிகர் ஒருவர் தனது செல்போனை உயர்த்தி செல்ஃபி எடுக்கும் ஆவலில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நேரம் சிவகுமார் திடீரென செல்ஃபி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார். அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாகப் பரவியது. இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இளைஞர் செல்போனைத் தட்டி விட்டது ஏன் என்று சிவகுமார் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ இயக்குநர் லெனின் பாரதி, சிவகுமாரின் செயலை வன்மையாக கண்டித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் லெனின் பாரதி வெளியிட்ட பதிவில், ”செல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவகுமாரின் கை குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா…?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY