கோலி சிரிப்பது என் காதில் விழுகிறது: ரோஹித் சர்மா ருசிகரம்

12
கோலி

மும்பையில் நடைபெற்ற 4வது போட்டியில் 137 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து இரட்டைச் சதம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது ஆட்டமிழந்தார்.

ஆனால் இவரும் ராயுடுவும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 211 ரன்களை அதிரடி முறையில் சேர்த்தது இந்திய அணிக்கு 224 ரன்கள் வெற்றியைப் பெற்றுத்தந்தது.

இன்னும் சொல்லப்போனால் ரோஹித் சர்மா 162, மே.இ.தீவுகள் 157, ரோஹித் சர்மாவிடம் மே.இ.தீவுகள் 5 ரன்களில் தோல்வி தழுவியது.

நேற்று பேட்டிங்கோடு இல்லாமல் 3 கேட்ச்களையும் பிடித்தார் ரோஹித் சர்மா, குறிப்பாக ஸ்லிப்பில் குல்தீப் யாதவ்வின் கணிக்க முடியா கூக்ளிக்களை கணித்து அபாரமாக கேட்ச் பிடித்து வருகிறார்.

இந்நிலையில் தன் இன்னிங்ஸ், தன் ஸ்லிப் கேட்சிங் ஆகியவை பற்றி ரோஹித் சர்மா கூறியதாவது:

ஸ்லிப்பில் கொஞ்ச நாட்களாக கேட்ச்களைப் பிடித்து வருகிறேன்… இதனை நான் கூறும்போதே விராட் கோலி சிரிப்பது என் காதில் விழுகிறது. ஆனால் ஸ்லிப்பில் கேட்ச்களை நான் கொஞ்ச நாட்களாக பிடித்து வருகிறேன்.

கேட்ச்களை எடுப்பது முக்கியம். கேட்ச்கள் எப்போதும் வந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் ஸ்லிப்பில் குல்தீப் யாதவ்வின் கூக்ளிக்களை கணிப்பது மிகக் கடினம். ஆனால் அவர் கூக்ளிக்கு எப்படித் தயாராவது என்பதைக் கற்றுக் கொண்டேன்.

எங்களிடமிருந்து  துல்லியமான ஆட்டம் வெளிப்பட்டது, 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்தாலும் நானும் ராயுடுவும் பெரிய கூட்டணி அமைத்தோம், இப்போதெல்லாம் பெரிய கூட்டணிகள் சாத்தியமாகின்றன, இது நல்ல விஷயம்.

மேலும் ஒரு அணியாகப் பவுலிங் செய்ததைப் பார்க்கும்போதும் மனதுக்குத் திருப்தியாக இருந்தது. இப்படிப்பட்ட அணியின் ஆட்டத்தை நீண்டநாட்களாக எதிர்பார்த்து வருகிறோம். முழுமையாக ஆதிக்கம் செலுத்தினோம். வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்தனர், ஸ்பின்னர்கள் பந்துகளைத் திருப்பினர்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

LEAVE A REPLY