‘செங்கோல்’ கதையும் ‘சர்கார்’ கதையும் ஒன்றுதான்: சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் கடிதம்

13

வருண் என்பவர் எழுதிய ‘செங்கோல்’ என்ற கதையும், தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’ படத்தின் கதையும் ஒன்றுதான் என்று திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் அளித்த கடிதம் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கி யுள்ள ‘சர்கார்’ திரைப்படம், பெரும் எதிர் பார்ப்புக்கிடையில், தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளி யீட்டு விழாவில், முதல்வர் குறித்து விஜய் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு அமைச்சர்கள் பலரும் பதில் அளித்தனர்.

வரும் நவம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், ‘சர்கார்’ திரைப்படம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் என்கிற ராஜேந் திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

நான் ‘செங்கோல்’ என்ற தலைப்பில் எழுதிய கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத் திருந்தேன். அந்த கதையை திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார்.

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜிடம் இந்த பிரச்சினையைக் கொண்டுசென்றபோது அவர் இருதரப்பை யும் அழைத்து விசாரித்தார். பின்னர், ‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ இரண்டும் ஒரே கதைதான் என உத்தரவிட்டார். எனவே, ‘சர் கார்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் தெரி வித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பட நிறுவனம் சார்பில், வரும் தீபாவளி அன்று படத்தை ரிலீஸ் செய்ய உத்தேசித்துள்ள தாகவும், வழக்கு குறித்து தங்கள் பதிலை வரும் 30-ம் தேதி அளிப்பதாகவும் அவகாசம் கேட்டனர். மேலும், அதுவரை தடை எதுவும் விதிக்காமல் இருக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக படத் தயாரிப் பாளர், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் பதில் அளிக்க உத்தர விட்டு, வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ கதை இரண்டும் ஒன்றே என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று வெளியானது. இதனால் இப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

இதுதொடர்பாக கே.பாக்யராஜை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

‘சர்கார்’ கதை தொடர்பாக புகார் வந் தது. அப்படம் சம்பந்தப்பட்டவர்களிடம் இது தொடர்பாக கேட்டோம். அவர்களும் அக் கதையைக் கொடுத்தார்கள். ‘செங்கோல்’ கதையையும், ‘சர்கார்’ கதையையும் ஒப்பிட் டுப் பார்த்தோம். இரண்டிலுமே கதையின் மையக்கரு என்பது ஒன்றுதான்.

உடனே இரு தரப்பினரையும் சமரசம் செய்துவைக்க முயற்சி செய்தோம். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் அதை ஏற்க மறுத்துவிட்டார். வெளியே இச்செய்தி போக வேண்டாம் என்று முயற்சி செய்து பார்த் தேன். அது சரிவரவில்லை. நீதிமன்றம் வழியாகத்தான் சொல்வோம் என்றார்கள்.

‘இக்கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பா கவே வருண் என்பவர் பதிவு செய்து வைத் திருக்கிறாரே. அவருக்கு ஏதாவது தலைப் பில் கிரெடிட் கொடுத்தால் நன்றாக இருக் கும்’ என்று ’ என்று ஏ.ஆர்.முருகதாஸிடம் சொன்னேன். ‘இல்லை, இக்கதை என் னுடையது. நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஏ.ஆர்.முருகதாஸ் விடாப்படியாக இருந்தார்.

எழுத்தாளர்கள் சங்கத்தைப் பொறுத்த வரை இரண்டு கதையும் ஒரே சாராம்சம்தான். எனவே, ‘அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி எடுக்க வேண்டுமோ, எடுத்துக் கொள்ளுங் கள். முழுமையாக உதவ முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்’ என்று வரு ணிடம் கடிதம் கொடுத்தோம். அதை நீதிமன் றத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதம்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்தக் கடிதம் எங்களுடையதுதான். அதில் மாற்றம் இல்லை.

இவ்வாறு கே.பாக்யராஜ் கூறினார்.

LEAVE A REPLY