சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

38
சிவன்
ஜப்பசி மாத பவுர்ணமி சிவபெருமானுக்கு உகந்த நாளாகும்.  ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் உடனுறை சிவகாமி அம்மாள் கோவிலில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிவபெருமான் அன்ன அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
இதுபோன்று, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மளவராயநத்தத்தில் தென்னகர் சிவன் கோவில் அமைந்துள்ளது. ஆன்மிக சிறப்புபெற்ற இக்கோவிலில் சிவபெருமான் அறம்வளர்த்த நாயகி அம்பாளுடன் எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷே வழிபாடுகளும், அதனைத்தொடர்ந்து அலங்காரம், அன்ன வழிபாடு, தீபாரதனை நடைபெற்றது. சிவபெருமான் அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்பு பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதுபோன்று, திருக்கோளூரிலுள்ள ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீசிவகாமி அம்மாள் உடனுறை ஸ்ரீசேரசோழ பாண்டீஸ்வர் சிவன் கோவிலிலும் அன்னாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆழ்வார்தோப்பில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் கரையோரமுள்ள அறம்வளர்த்தநாயகி சமேத ஏகாந்தலிங்க சுவாமி(காந்தீஸ்வரன்) திருக்கோவிலிலும் அன்னாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதுபோன்று மாரமங்களம் சிவன்கோவிலிலும் அன்னாபிஷேக வழிபாடுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அன்னாபிஷேக வழிபாடுகளில் சிவபக்தர்கள், ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY