தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் விழா – தரிசனம் செய்ய பெண்கள் குவிந்தனர்

28

தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் விழா நடந்தது. தரிசனம் செய்ய ஏராளமாக பெண்கள் குவிந்தனர்

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி, பெளர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். பெண்களுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

அந்த வகையில் இன்று தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் – பாகம்பிர்யால் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமாக பெண்கள் தரிசனம் செய்தனர்.

ஒரு டன் அரிசியில் அன்னம் தயார் செய்து அந்த அன்னத்தைக் கொண்டு சுவாமி சங்கரராமேஸ்வரருக்கு பஞ்சலிங்க அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் பாகம்பிரியாள் அம்பாளுக்கு 5008 வளையல் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு விஷேச தீபாராதனை நடைபெற்றது. திரலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY