தீபிகா படுகோன், ரன்வீர் சிங் திருமணத் தேதி வெளியானது

10
தீபிகா

ரன்வீர் சிங், தீபிகா படுகோன் : கோப்புப்படம்

பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோன் திருமணம் நவம்பர் 14,15-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை இருவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தமிழில் கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானவர் தான் தீபிகா படுகோனே. தீபிகா நடித்து வெளியான பத்மாவத் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுஇவர் பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரன்வீர். இவரும் இந்தத் திரைப்படத்தின் மூலம் காதல்வயப்பட்டனர். இருவரின் திருமண் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், இப்போது, திருமண அழைப்பிதழை இருவரும் வெளியிட்டுள்ளனர்.

வெள்ளை நிற அட்டையில், தங்க நிற பார்டரில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இந்தியிலும், ஆங்கிலத்திலும் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணப் பத்திரிகையில், நம்முடைய குடும்பத்தின் ஆசியுடன், மிகுந்த மகிழ்ச்சியுடன், எங்களின் திருமணம் 2018, நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது நீங்கள் காட்டிய உங்களுடைய மேலான அன்புக்கு நன்றி. எங்களின் வாழ்க்கை பயணம் அன்பாகவும், விஸ்வாசமாகவும், நட்புடனும், ஒற்றுமையுடன் செல்ல உங்களின் ஆசியை வேண்டுகிறோம். அன்புடன் தீபிகா, ரன்வீர் என்று அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் 4 நாட்கள் வரை நடக்கும் என்று ரன்வீர், தீபிகாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து ரன்வீர் தரப்புக்குநெருங்கியவட்டாரங்கள் கூறுகையில், இருவரின் திருமணமும் இந்து முறைப்படி நடக்கும். ஊடகங்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கும் வகையில் திருமணம் இருக்கும். மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளனர். 4 நாட்கள் வரை திருமண நிகழ்ச்சிகள் இருக்கும் எனத் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY