தூத்துக்குடி கடற்ரையை சுத்தம் செய்த சமூக அமைப்பினர் – பொதுமக்கள் பாராட்டு !

48

மரங்களை நட்டும் பிளாஸ்டிக் கொருட்களை அகற்றியும் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது தூத்துக்குடியில் உள்ள ’ஆல் கேன் டிரஸ்ட்’ உள்ளிட்ட சமூக அமைப்புகள்.

இன்று (21.10.2018) காலை அப்படியொரு சமூப்பணி நடந்திருக்கிறது. தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய சிந்தாதரிமாதா
கோவில் அருகே காலை 6.30 மணிகே ஆஜர் ஆனார்கள் இவ்வமைப்பை சேர்ந்தவர்கள்.
இவர்களோடு லயன்ஸ் கிளப், இளையவேந்தன் இரத்ததான கழகம், விளைபூக்கள், ரெட் ட்ராப் அமைப்பினர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 70 பேர் அதில் அடங்கும்.
கடலோரத்தில் ஆங்காங்கே கிடந்த பிளாஸ்ட் பொருட்களை அகற்றினார்கள். அந்த பகுதியை சுத்தமாக்கினர். பக்கிள் ஓடையிலிருந்து வரும் கழிவு தண்ணீரில்தான் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் வருகிறது.


கடலுக்குள் வந்ததும் காற்றின் வேகத்தால் இந்த கடற்கரை பகுதியில் கரை ஒதுங்குகிறது என்கிறார்கள். எனவே தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையாவது இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த கடற்கரையை எப்போதுமே சுத்தமாக இருக்கும்படி செய்வோம்’ என்கிறார்கள்.
ஆல் கேன் டிரஸ்ட்யை சேர்ந்த வக்கீல் மோகன்தாஸ், மாநகராட்சி அலுவலகர்கள் ஹரி மற்றும் ராஜசேகரன், இளைய வேந்தன் அமைப்பை சேர்ந்த சேக் முகமது, லயன்ஸ்கிளப்யை சேர்ந்த டேவிட், ரெட் ட்ராஃப் அமைப்பின் கிஸோர், விளைபூக்கள் அமைப்பை சேர்ந்த பாலா உள்பட சுமார் 70 பேர் இந்த சமூகப்பணியில் ஈடுபட்டனர்.
இவர்களின் பணியை அப்பகுதி பொதுமக்கள் மனதார பாராட்டி வருகிறார்கள். !

LEAVE A REPLY