தூத்துக்குடியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து செம்மரம் கட்டைகளை கடத்தியதாக 5 பேர் கைது !

39

தூத்துக்குடியில் பாதுகாத்து வைத்திருந்த இடத்திலிருந்து செம்மரம் கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்தப்பட்ட செம்மர கட்டைகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர். அவைகளை துறைமுகம் எல்லையில் உள்ள தனியாருக்கு சொந்தமான யார்டில் பாதுகாத்து வைத்தனர். இந்தநிலையில் சோரீஸ்புரம் பகுதியில் வேறு ஒரு தனியார் குடோவுனில் செம்மரம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சோதனை செய்து கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே தனியார் யார்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த செம்மரங்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. சோரீஸ்புரம் பகுதியில் பதுக்கி வித்திருந்தது தனியார் யார்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட செம்மர கட்டைகள்தான் என அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டோரை தேடும் பணி நடந்து வந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு சம்மந்தமாக தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்த மரிய அண்டன்(33), கால்டுவெல்காலனியை சேர்ந்த கிட்ஸன்(29),

சக்திவிநாயகர்கோவில் தெருவை சேர்ந்த மதிபாலன்(32), அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாலசுந்தர்(27), அண்ணாநகரில் இன்னொரு பகுதியை சேர்ந்த ஐயப்பன்(31) ஆகிய 5 பேர்களை சிப்காட் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY