புதிய தலைமைச் செயலக கட்டுமான விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் முறையீடு

15
விவகாரம்

கடந்த திமுக ஆட்சிக் காலத் தில் சென்னை ஓமந்தூரார் அரசி னர் தோட்டத்தில் புதிய தலை மைச் செயலகம் கட்டப்பட்டது.

இதன் கட்டுமானத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள் ளதாகக் கூறி இதுதொடர் பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசா ரணை ஆணையம் அமைக் கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தர வுப்படி ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டதால், இதுதொடர் பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதி ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் பிறப்பித்த உத்தரவுப் படி பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசார ணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி ஸ்டாலின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ரகுபதி ஆணையத்தின் ஆவணங் கள் முறையாக பரிசீலிக்கப்பட்டதா, அவை எப்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘புதிய தலைமைச் செயலக கட்டுமானம் தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை முறையாக பரிசீலித்து, தேவைப்பட்டால் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண் டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், தமிழக அரசு அந்த ஆவணங்களை முறை யாக பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’’ என கோரினார். இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்றனர்.

LEAVE A REPLY