மடத்துப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கட்டுமான பணி : ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.10 லட்சம் நிதியுதவி

29
பத்திரகாளியம்மன்

தூத்துக்குடு மாவட்டம் மடத்துபட்டி  பத்திரகாளிணம்மன் கோவில் கட்டுமான பணிக்கு ஸ்டெர்லைட் நிறுவணம் ரூ.10 லட்சம் நிதியுதவிஅளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சமுதாய மம்பாடு,மகளிர்மேம்பாடு, கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல பணிகளை தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மடத்துபட்டி கிராமத்தில் அப்பகுதியினர் பத்திரகாளியம்மன் கோவில்அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக நிதியுதவிகோரி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து கோவில் கட்டுமான பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று மடத்துப்பட்டியில் பத்திரகாளியம்மன்  கோவில் கட்டுமான பணிகள் துவக்க விழா(பூமி பூஜை) நடந்தது. இதில்ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கலந்து கொண்டு அதன் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குமார வேந்தன், நாகராஜ் ,ஜாய்ஸ், நிஷின்ஆகியோர் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில்  பத்திரகாளியம்மன்  கோவில் அமைப்பு நிர்வாக கமிட்டி தலைவர் துரைராஜ், செயலாளர் ராமானுஜம் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள், ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY