பனைமரங்களை அழிவில் இருந்து பாதுகாத்திடவேண்டும்..

57
பனைத்தொழிலாளர்
பேடு மற்றும் சி.சி.எப்.சி நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பனைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் வேம்பாரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பாண்டியன் கிராமவங்கி மண்டல மேலாளர் தெய்வநாயகம் தலைமை வகித்தார். பேடு தொண்டு நிறுவனர் ராஜேந்திரபிரசாத், சுப்பையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேடு நிறுவன திட்ட மேலாளர் மலர்மன்னன் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ராயப்பன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பனைமரங்களை பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வரும் நமது மாநிலத்தின் மரமான பனை மரங்களை பாதுகாத்திடவேண்டும். கற்பகவிருட்சகமான பனைமரத்தின் பயன்கள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மூலமாக எடுத்து சொல்லிடவேண்டும்.
பனைத்தொழிலாளர்
நலிவடைந்த நிலையிலுள்ள பனைத்தொழிலாளர்களை பாதுகாத்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திவும் மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்திடவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சுயஉதவிக்குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஒருங்கிணைப்பாளர் அன்பரசு நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேடு மற்றும் சி.சி.எப்.சி நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY