தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று தொடங்கியது : வரும் 23-ம் தேதி வரை நடக்கிறது.

34
புஷ்கர திருவிழா

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கலாம்.
அந்த வகையில் ஒவ்வொரு நதிகளும் ஒவ்வொரு நட்சத்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் துலாம் ராசியிலிருந்து குரு விருச்சக ராசிக்கு இடம்பெயரக் கூடிய அன்று விருச்சக ராசிக்கு சொந்தமான நதியான தாமிரபரணி, நதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் விழா எடுக்கப்படுகிறது.
வருடம் தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு புஷ்கர விழா என்று பெயர். அதுவே 144 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் விழாவிற்கு மகா புஷ்பகர விழா என்று சொல்லப்படுகிறது. அத்தகைய விழா தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி, வரும் 23-ம் தேதி வரை நடக்கிறது.
நூற்றுக்கு மேற்பட்ட படித்துறைகளில் மக்கள் நீராடும் வகையில் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை,கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென் திருப்புவனம், சேரன்மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, தைப்பூசமண்டபம், வண்ணார்பேட்டை, எட்டெழுத்து பெருமாள், கோசாலை, இஜடாதீர்த்தம்,சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களிலும்
தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்த்திருநகரி, தென் திருப்பேரை,ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்து வருகிறது.
இவ்விழாயை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார். நெல்லை, தூத்துக்குடி இரு மாவட்ட கலெக்டர், தென் மண்டல ஐஜி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
சனாதன தர்ம நடாதிபதிகள், ஆதிகர்த்தர்கள், துறவியர்கள், சிவாச்சாரியர்கள் முன்னிலையில் மஹாகணபதி ஹோமம் மஹாபுஷ்கர கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி ஹோமங்கள், பூஜைகள், சிரப்பு லட்ச அர்ச்சனைகள் மற்றும் மஹா தீப ஆராத்தி நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை அந்தந்த பகுதியிலும் ஸ்ரீ தாம்ரபர்ணீ மஹாபுஷ்கர கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY