ஆடு திருடிய வழக்கில் மதபோதகர் கைது: பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவானவர்

12
ஆடு

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே ஆடு திருடிய வழக்கில் கிறிஸ்தவ மதபோதகர் மிலன்சிங் (46) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பல் வேறு இடங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பல பெண் களை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது சிபிசிஐடி விசாரணை யில் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் மகன் மிலன் சிங் (46). ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பை யூரில் போதகராக இருந்தார். இவரது மனைவி ஜீவிதா (40). கடந்த சில ஆண்டுகளுக்குமுன் பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த காந்திமதி (30) என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமிருந்து 15 பவுன் நகை மற்றும் ரூ.4.5 லட்சம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மிலன்சிங் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

மிலன்சிங்கை சங்கரன்கோவில் போலீஸார் கைது செய்தனர். மேல் விசாரணையில், வேலைவாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றியதும், அவ்வாறு ஏமாற்றப் பட்ட பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, தருமபுரி அருகே காவேரிபாக்கம் பகுதியில் எரித்து கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதைத் தொடர்ந்து காவேரிபாக்கம் போலீஸார் மிலன்சிங்கை கைது செய்தனர்.

தலைமறைவானார்

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த மிலன்சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலை மறைவானார். மிலன்சிங் மீது பல் வேறு வழக்குகள் இருந்ததால் விசா ரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட் டது. விசாரணையில் இவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந் தது. இந்நிலையில், தென்காசி நன்னகரம் பகுதியில் தலைமறை வாக இருந்த மிலன்சிங்கை வீ.கே. புதூர் போலீஸார் கைது செய் தனர். திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்த ராமர் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் கடந்த 2009-ல் திருடு போன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY