ஏற்றுமதி, இறக்குமதி வசதிகள், மின்சாரம் வழங்கப்படும்; தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்

6
ஏற்றுமதி

“தொழில்முனைவோருக்கு ஏற்று மதி, இறக்குமதிக்கான வசதிகள், தேவையான மின்சாரம் வழங்கு கிறாம். முதலீடு செய்ய வாருங்கள்” என்று முதலீட்டாளர்களுக்கு முதல் வர் கே.பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார் பில், கனெக்ட் 2018 என்ற தகவல் தொழில்நுட்ப (ஐடி) மாநாடு கடந்த 2 தினங்களாக நடந்தது. மாநாட் டின் நிறைவு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் கே.பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘தமிழகத் தில் மின்ஆளுமை’ என்ற நூலை வெளியிட்டார்.

அப்போது, மின் ஆளுமைக்கான தமிழக முதல்வரின் விருதுகளை கல்லூரி மாணவர்களுக்கும் சிஐஐ கனெக்ட் விருதுகளை தொழில் முனைவோருக்கும் வழங்கினார். வாழ்நாள் சாதனையாளர் விருது, டிசிஎஸ் நிறுவன முதல் தலைமை செயல் அதிகாரியும் தகவல் தொழில்நுட்ப துறையின் (ஐடி) முன்னோடியாக அறியப்படும் எப்.சி.கோலிக்கு வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதன் மூலம், பல சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தொழில் தொடங்க வருபவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நிறைவேற்றி தருகிறேன். தமிழகத்தில் தொழில் முனைவோர் ஏற்றுமதி, இறக்கு மதி செய்ய வசதியாக துறைமுக அணுகுசாலை வசதி மேம்படுத்தப் பட்டு வருகிறது. வேண்டிய அளவு மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவே, தொழில்முதலீட்டாளர்களாகிய நீங்கள் புதிய முதலீடுகளை மாநிலத் தில் பெருந்தொழில் மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில் பிரிவுகளில் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும்போது, “ஒற்றை சாளரமுறையில் 100 சிறு தொழில் மற்றும் 12 பெருந்தொழில் நிறுவனங்களுக்கு தற்போது உடனடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பேசும் போது, ‘‘கடந்த முதலீட்டாளர் மாநாட் டில் ஐடி பிரிவில் ரூ.10,950 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் போடப் பட்டது. தற்போது அமெரிக்கா, சிங் கப்பூர் நாடுகளில் உள்ள முதலீட் டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ரூ.21 ஆயிரம் கோடிக்கு முதலீடு கிடைக்கும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தகவல் தொழில்நுட்ப செயலர் சந்தோஷ்பாபு, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் இயக்குநர் சஞ்சய் தியாகி, சிஐஐ தமிழ்நாடு பிரிவு தலை வர் எம்.பொன்னுசாமி, சிஐஐ தென் மண்டல துணைத்தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, சிஐஐ கனெக்ட் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிஐஐ தலைவர் பாராட்டு

இங்கு ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தால் ஏராளமான முதலீடுகள் வரத்தொடங்கியுள்ளன. இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரிக் கும். இவ்வாறு பொன்னுசாமி பேசினார்.

LEAVE A REPLY