ரயில்வேயில் ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5
ரயில்வே

ரயில்வே ஊழியர்களுக்கு உற் பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை (போனஸ்) வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இதில், நடப்பு 2017-18 நிதியாண்டில் ரயில்வே ஊழியர் களுக்கு உற்பத்தி அடிப்படையில் 78 நாட்களுக்கான சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம் அரசிதழில் பதிவு பெறாத (நான்-கெசட்டடு) சுமார் 11.91 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். அதிகபட்சமாக ஒருவருக்கு ரூ.17,951 கிடைக்கும். எனினும் ஆர்பிஎப், ஆர்பிஎஸ்எப் வீரர்களுக்கு இது பொருந்தாது. ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு முன்பு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுவது வழக்கம்.

மேலும் தேசிய தொழில் பயிற்சி கவுன்சில் (என்சிவிடி) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை (என்டிஎஸ்ஏ) ஆகிய நிறுவனங் களை ஒன்றாக இணைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யது. இதன்படி, தேசிய தொழில் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிவிஇடி) என்ற பெயரில் இந்த அமைப்பு செயல்படும்.

இது நீண்டகால மற்றும் குறுகிய கால தொழில் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் செயல் பாடுகளை கட்டுப்படுத்தும். மேலும் இதுபோன்ற நிறுவனங்கள் செயல் படுவதற்கான குறைந்தபட்ச தர நிலைகளை உருவாக்கும். தனியார் முதலீட்டை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY