ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைரம் கிடைத்தது; மத்திய பிரதேச வைர சுரங்கத்தில் ஏழை தொழிலாளிக்கு ‘ஜாக்பாட்’

11
கோடி

மத்திய பிரதேச மாநிலத்தில் வைர வேட்டையில் ஈடுபட்ட ஏழை தொழிலாளிக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா நகரில் வைர சுரங்கங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மக்களும் ஆங்காங்கே குழிகள் (ஆழமற்ற சுரங்கம்) தோண்டி வைர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி குழிகள் தோண்டி வைர வேட்டை யில் ஈடுபட்ட ஏழை தொழிலாளி மோதிலால் பிரஜாபதிக்கு (30) அடித்தது ஜாக்பாட்.

வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை பன்னாவில் குழிகள் தோண்டி வைர வேட்டை யில் ஈடுபட்டிருந்தார் மோதிலால். அப்போது அவருக்கு சற்று பெரிய வைரக்கல் கிடைத்தது. அது 42.9 கேரட் கொண்ட வைரக்கல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பன்னா ஆழமற்ற சுரங்க வரலாற்றிலேயே கடந்த 1961-ம் ஆண்டு முதல் முறையாக 44.55 கேரட் கொண்ட மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 2-வது அதிக எடை கொண்ட வைரம் கிடைத்துள்ளது என்று பன்னா மாவட்ட வைரத் துறை அதிகாரி சந்தோஷ் சிங் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘மோதிலால் கண்டுபிடித்துள்ள வைரம் ரூ.1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை அரசு சட்டவிதிமுறைகள்படி நாங்கள் ஏலத்தில் விடுவோம்’’ என்றார். இந்தத் தகவல் பரவியதும் தனியார் தொலைக்காட்சிகளில் மோதிலால் பிரபலமாகி விட்டார்.

ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘மஸா ஆ கயா’ என்று ஆரவாரம் செய்தார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘இந்த வைரத்தால் கிடைக்கும் பணம், எனது வயதான தாய், தந்தையை கவனித்துக் கொள்ள உதவும். அத்துடன் எனக்கு நிறைய கடன்கள் உள்ளன. அவற்றை எல் லாம் அடைத்துவிடுவேன். என் குழந் தைகளையும் நல்ல பள்ளியில் படிக்க வைப்பேன்’’ என்றார்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளது பன்னா மாவட்டம். இது விந்திய மலைத் தொடர் பகுதியில் அமைந்துள் ளது. இங்குதான் நாட்டிலேயே வைரங்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன. அதேநேரத்தில் சட்ட விரோதமாக சிறு சிறு குழிகள் தோண்டி உள்ளூர் வாசிகளும் கோண்ட் பழங்குடியின மக்களும் வைர வேட்டையில் ஈடுபட்டு வரு கின்றனர். இங்கு வெளியாட்களும் வைர வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், பன்னாவில் வைர சுரங்கம் பற்றி யாரை கேட்டாலும், ‘நம்பர் இரண்டா, ஒன்றா’ என்று கேட்கிறார்கள். அதாவது உள்ளூர்வாசியாக இருந்தால் அவர் நம்பர் 1. அவர் வைர வேட்டையில் ஈடுபடுவது சட்டப்பூர்வமானது. வெளியாட்களாக இருந்தால் அவர்கள் நம்பர் 2. அவர்கள் சட்டவிரோத வைர வேட்டையில் ஈடுபடுபவர்கள் என்று கூறுகின்றனர்.

ஆனால், பன்னாவில் எட்டுக்கு எட்டு மீட்டர் நிலத்தை உள்ளூர் வாசிகளுக்கு அரசு அல்லது உள்ளூர் அரசு நிர்வாகங்களே குத்தகைக்கு விடுகின்றன. அவர் கள் ஆழமற்ற குழிகள் தோண்டி வைரங்களை தோண்டியெடுக் கின்றனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் வைரங்களை கண்டுபிடித்தால் அவற்றை தேசிய தாதுப்பொருட்கள் மேம்பாட்டு வாரிய அலுவகத்தில் (என்எம்டிசி) டெபாசிட் செய்கின்றனர்.

அங்கு வைரங்களை மதிப்பிட்ட பின் 3 மாதத்துக்கு ஒரு முறை ஏலத்தில் விடுகின்றனர். அதில் கிடைக்கும் தொகையில் 11.5 சதவீத பணத்தை ராயல்டியாக மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. மீதி தொகையை வரிகளைக் கழித்துக் கொண்டு வைரத்தைக் கண்டுபிடித்தவருக்கு வழங்கி விடுகின்றனர்.

LEAVE A REPLY