எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்க மம்தா முயற்சி

7
எதிர்க்கட்சி

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது, அந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து பாஜகவை தோற்கடிப்பது என முடிவு எடுக் கப்பட்டது. இதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த மாதம் சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதற்கு சற்று முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகிய இரு வரும் காங்கிரஸுடன் இணையா மல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இதேநிலை மக்களவைத் தேர்தலிலும் நீடித்தால் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிடும் என அஞ்சப்படுகிறது. இதை முறியடிக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ல் திரிணமூல் காங்கிரஸின் மாபெ ரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து எதிர்கட்சி தலைவர் களுக்கும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் திரிணமூல் காங்கிர ஸின் எம்பிக்கள் வட்டாரம் கூறும் போது, ‘மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரி வதை எங்கள் தலைவர் விரும்ப வில்லை. இதனால், அவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கை யில் அவர் இறங்க உள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மம்தாவின் கூட்டம் நடைபெறும் அதே மைதா னத்தில் பாஜகவும் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல், மம்தாவின் கூட்டத்திற்கு பிறகு மார்க்சிஸ்ட் கட்சியும் அதே மைதானத்தில் ஒரு கூட்டம் நடத்துகிறது.

இதில் மம்தாவை தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கவும் திட்டமிட்டு வருகிறது. எனவே, வழக்கமாக உத்தர பிரதேசத்தை மையமாக கொண்டு நிகழும் மக்களவைத் தேர்தல் இந்தமுறை மேற்குவங்க மாநிலத் திற்கு மாறியிருப்பதாகக் கருதப் படுகிறது.

இதனிடையில், மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஹரியாணாவின் முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தள தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா கூறியுள்ளார்.

LEAVE A REPLY