ஜெ.வையே மிரட்டியவர்கள்: அமைச்சர்

14
அமைச்சர்

மதுரை அவனியாபுரத்தில் அதிமுக சார்பில் ஊழியர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்கின்றனர். புகார், வழக்கின் தன்மை அடிப்படையில் காவல்துறை செயல்படுகிறது. நீதிமன்றம் எடுக்கும் முடிவை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்றத்தை யாரும் குறைசொல்ல முடியாது. எந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். முகாந்திரம் இல்லாமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காது.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தனது பலம் மற்றும் செல்வாக்கை இழந்தவர். ஊடகத்துறையின் கவனத்தைத் திசை திருப்பச் செயல்படுகிறார். நிகழ்ந்த சந்திப்பு குறித்து உடனே கூறாமல் அதன்மூலம் பயன்பெற பிளாக் மெயில் செய்கிறார். ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர், என்னைப் போன்றவர்களை விடுவார்களா? முதல்வர், துணை முதல்வர் மீது பல தவறான தகவல்களைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் மூலம் கூறியுள்ளார். தினகரன் உண்மையானவர் என்றால் அவரை யார் சந்தித்தாலும் உடனே தெரியப்படுத்த வேண்டும். இவ்வறு அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY