குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது !

34

புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசாரா திருவிழா இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் வரும் 19-ம் தேதி இரவு 12 மணிக்கு நடக்கிறது.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று (9-ம் தேதி) காலை காளி பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இன்று காலை கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடியேற்றமும் தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றத்திற்குப் பின்னர், வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் வரும் 19ம் தேதி இரவு 12 மணிக்கு நடக்கிறது. இந்த திருவிழா நாட்களில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY