சர்காருக்குப் போட்டியாக தீபாவளியில் ‘திமிரு புடிச்சவன்’ ரிலீஸ்

12

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படமும் இதேநாளில் வெளியாகிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. ஸ்ரீகாந்த், சுனைனா நடித்த ‘நம்பியார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘திமிரு புடிச்சவன்’என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இதில் நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இந்நிலையில் ‘திமிரு புடிச்சவன்’படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ‘சர்கார்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய மூன்று படங்களும் தீபாவளியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY