இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு

22
இந்தோனேசியா

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் ஏறக்குறைய அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கடலோரத்தில் இருந்த பெரிய அளவிலான குடியிருப்புகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. அந்த நகரில் வீடுகளை இழந்த மக்கள் முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுனாமி தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஆக உயர்ந் துள்ளது. அந்த நகரிலுள்ள ஓட்டல் ரோவா-ரோவாவில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்டோர் புதையுண்டு விட்டனர். அங்கிருந்து உடல்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

2 லட்சம் பேர் பாதிப்பு

சுனாமி தாக்கியதில் நகரி லிருந்த 60 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 2 லட்சம் பேருக்கு உதவி தேவைப் படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியானவர்களின் உடல் களைப் புதைக்கும் பணியும் நடை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலு நகரத்தில் அமைந்துள்ள துறைமுகத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன. நகரின் போக்குவரத்து மையமாகவும், வர்த்தக மையமாகவும் இந்த துறைமுகம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. – ஏஎப்பி

LEAVE A REPLY