உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல்:  அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக வழக்கு; சட்டப்படி சந்திக்க தயார் என அமைச்சர் விளக்கம்

8
திமுக

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப் பூர் உள்ளிட்ட அனைத்து மாநக ராட்சி, நகராட்சிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவுப் படியே அவர் கைகாட்டும் நபர்க ளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட் டுள்ளன.

அமைச்சரின் சகோதரர் கள், நெருங்கிய உறவினர்கள், நண் பர்கள், பினாமிகளின் நிறுவனங் களுக்கு பல கோடி ரூபாய் மதிப் புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோ தமாக வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு ரூ.86 லட்சமாக இருந்த ஒரு நிறுவனத்தின் வரவு – செலவு, எஸ்பி.வேலுமணியின் தயவால் ரூ.28 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோல ரூ. 17 கோடியாக இருந்த மற்றொரு நிறுவனத்தின் வரவு செலவு தற்போது ரூ.498 கோடியாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமைச்சரின் பினாமிகள் நடத்தும் பல நிறுவனங்களின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

இவர் அமைச்சரான பிறகு சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் வைப்பீடுகள், இருப்பு நிதி பல மடங்கு குறைந் துள்ளது. ரூ.942 கோடி அளவுக்கு உபரி வருவாயைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் ரூ.2,500 கோடி அளவுக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேபோல கோவை மாநக ராட்சியின் வங்கிக்கணக்கில் இருந்து சட்டவிரோதமாக பணம் எடுக்கப்பட்டு அதன் இருப்பு நிலையும் மோசமாகியுள்ளது.

அமைச்சரின் பினாமியாக செயல்பட்டவரின் பொறுப்பில் தற்போது ‘நமது அம்மா’ மற்றும் நியூஸ் ஜெ போன்ற நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தமிழக அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள், பொதுப்பணித் துறை, மெட்ரோ ரயில், ஸ்மார்ட் சிட்டி என பல்வேறு ஒப்பந்தங்கள் அமைச்சரின் உறவினர்களுக்கும், பினாமிகளுக்குமே வழங்கப்பட் டுள்ளன. சட்டவிரோதமாக கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மூலம் அமைச்சரின் உறவினர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகைக்கடைகளையும், ஹோட்டல்களையும் நடத்தி வருகின்றனர்.

எனவே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வருமானவரிச் சட்டம், கம்பெனி சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், பினாமிகள் தடுப்புச் சட்டம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்தப் புகாருக்கு ஆதரவாக ஏராளமான ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வுள்ளது.

அமைச்சர் விளக்கம்

திமுக தொடர்ந்துள்ள வழக்கு குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கூறும்போது, ‘‘உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தங்கள் அனைத் தும் நேர்மையாக, விதிமுறை களுக்கு உட்பட்டே நடந்துள்ளது. என் மீது திமுக தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி நீதிமன்றத் தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும்’’ என்றார்

LEAVE A REPLY