மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

8
மதுரை

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி யுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக் கப்படும் என மோடி அரசு அறிவித் தது. அதனைத் தொடர்ந்து, அதற் கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. அந்த இடத்தில் உள்ள பெட்ரோல் கொண்டுசெல் லும் குழாய்களை மாற்றியமைக் கும் பணிகள் நடந்து வருகின்றன. இது ரூ.1,500 கோடியிலான திட்டம் என்பதால் அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். இந்தப் பணிகளுக்கு சிறிது கால தாமத மாவது இயற்கையானதுதான். கருவுற்ற தாய் குழந்தையை பெற 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுபோலதான் மதுரை எய்ம்ஸ் அமைப்பதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரங் களைக் கேட்டவர் கூட இந்த அறிவுப்பு அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது என்றுதான் சொல்லி யிருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. அதற்கான முயற்சிகளில் தமிழக பாஜக தொடர்ந்து ஈடுபடும்.

இவ்வாறு அறிக்கையில் தமிழிசை கூறியுள்ளார்.

LEAVE A REPLY