திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் வளாகத்தில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கும், வாடகை வசூலிக்கும் குத்தகைதாரர்களுக்கும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

12
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் வளாகத்தில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கும், வாடகை வசூலிக்கும் குத்தகைதாரர்களுக்கும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளது. இவ்விஷயத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் முதுநிலை கோயில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் 40 கோடிக்கும் அதிகமாக வருமானம் வருகிறது. ஆனால் இதில் சிறிய தொகை கூட பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்கு செலவிடப்படுவதில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். இக்கோயிலில் தேங்காய் பழம் விற்பனை, பஞ்சாதமிர்தம் விற்பனை, பிரசாத பொருட்கள் விற்பனை, கூல் டிரிங்ஸ் விற்பனை, இளநீர் விற்பனை என அனைத்தும் ஆண்டுதோறும் ஏலம் குத்தகைவிடப்பட்டு வருகிறது. இதில் பல கோடி ரூபாய்க்கு குத்தகை விடப்படுவதால் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும் தறுமாறாக அனைத்து பொருட்களும் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 5 பழம், தேங்காய், விபூதி, பத்தி கொண்ட தேங்காய் பழச் ரூ.120 முதல் ரூ.180 வரை பக்தர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க திருச்செந்தூர் கோயில் வளாகத்தில், கேன் டீ, வடை, பூ வியாபாரம், சுண்டல் வியாபாரம், ஐஸ், சுக்கு காபி, போட்டோ எடுப்பது உள்ளிட்ட சிறு வியாபாரிகள் அன்றாம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த வியாபாரிகள் சாதாரண நாட்களில் 100க்கும் மேற்பட்டவர்களும், விசேஷ மற்றம் திருவிழா நாட்களில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறு வியாபாரிகளிடம் கோயில் நிர்வாகம் நேரடியாக ரூ.20 வரை தரை வாடகை வசூல் செய்து வந்தது. இந்நிலையில் இந்தாண்டு முதல் வசூலிக்கும் உரிமம் குத்தகைக்கு விடப்பட்டடது. இதில் ரூ. 22 லட்சம் ஏலம் போனது. இதனால் கடந்த ஜூலை மாதம் முதல் தனியார்கள் சிறு வியாபாரிகளிடம் வாடகையை வசூலிக்க ஆரம்பித்தனர். அதிலும் பல மடங்கு கட்டணத்தை கூட்டி வசூலிக்க ஆரம்பித்தாகக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் தனியாருக்கு குத்தகை விடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இப்பிரச்சனையை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதாக கூறப்பட்டதால் தனியார் வாடகை வசூலிக்க உரிமையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கோயில் நிர்வாகம் அதனை அமல்படுத்தவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 15 நாட்களுக்கு மேலாக தனியார் வாடகை வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே குத்தகைதாரர்கள் கோர்ட்டிற்கு சென்றனர். இதில் தரை வாடகை வசூலிப்பதற்கு தடை விதித்தற்கு இடைகால தடை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுகாலை வழக்கம் போல் வியாபாரத்திற்கு சென்று சிறு வியாபாரிகளிடம் தனியார் குத்தகைதாரர்கள்

LEAVE A REPLY