மாணவி லூயிஸ் சோபியா விவகாரத்தை ஊக்குவித்தால் தலைவர்கள் பாதுகாப்புக்கு பிரச்சினையாகி விடும்

14
மாணவி

பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நொச்சிக்குப்பத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கோயில் திருவிழாவில் பங்கேற்ற மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

விமானத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்காக கைது செய் யப்பட்ட சோபியா, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதற்கும் இடம் பொருள் ஏவல் உள்ளது. விமான நிலையம் அரசுக்கு உட்பட்ட இடம். அங்கு கோஷமிடுதல் மற்றும் ஜனநாயகத்துக்கு முரணாக நடப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். இந்த போக்கை அனுமதித்தால், எந்த தலைவர்களும் விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல முடியாது.

விளம்பரத்துக்கான செயல்

இதுபோன்ற செயலை ஊக்குவித்தால் எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு பிரச்சினையாக முடியும். சிலர் விளம்பரத்துக்காகவே இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்துக்குள் சென்று இதுபோன்று பேச முடியுமா? தினகரன் விரக்தியின் உச்ச கட்டத்தில் உள்ளார். அதிமுகவை 10 ஆயிரம் தினகரன் ஒன்று கூடினாலும் ஒன்றும் செய்ய முடியாது.

பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண் டும். மாநிலத்தின் வரி வருவாய் என்பது கட்டுப்படுத்தப்பட்டது. மத்திய அரசு பெரிய அளவுக்கு வரி வருவாயை பெருக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி வாய்ப்புள்ள போது பெட்ரோல் விலையை குறைக்கலாம். பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.16ம், டீசலுக்கு ரூ.14-ம் கலால் வரி விதிக்கின்றனர். அதை குறைத்தாலே நாட்டு மக்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY