ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை:  சென்னையில் மு.க.அழகிரி தகவல்

11
இல்லை

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தனது முடிவை நாளை அறிவிப்பதாக தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 30 நாட்கள் ஆவதையொட்டி, சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி 5-ம் தேதி (நாளை) அமைதி பேரணி நடத்தக்கவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.

இதை முன்னிட்டு மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தி வந்தார். பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அழகிரி நேற்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

சென்னையில் நீங்கள் நடத்த உள்ள அமைதி பேரணியில் எத்தனை பேர் கலந்துகொள் வார்கள்?

நான் ஏற்கெனவே சொன்னது போல, ஒரு லட்சத்துக்கும் அதிக மானோர் கலந்துகொள்வார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பீர்களா?

தற்போது அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை.

திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலை வராக ஏற்கத் தயார் என்று கூறினீர்கள். அதற்கான அறிகுறி கள் தெரியவில்லையே?

செய்தியாளர்களை 5-ம் தேதி (நாளை) சந்திக்கிறேன். அப்போது என் முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY