பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி

21
பிம்ஸ்டெக்

இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பிம்ஸ்டெக்   மாநாடு  நேபாளத்தில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி  இன்று ( வியாழக்கிழமை) நேபாளம் சென்றடைந்தார். அந்நாட்டு  பாதுகாப்புத்  துறை அமைச்சர் இஷ்வோர் போக்ரெல் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து மோடி கூறும்போது, “வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். மேலும் நேபாள பிரதமர் கேபி ஷர்மாவிடம் இருதரப்பு உறவுக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி  அண்டை நாடுகளுடன்  நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிம்ஸ்டெக்  அமைப்பு உருவாக்கப்பட்டத்திலிருந்து கூடும் நான்காவது  மாநாடு இதுவாகும்.

LEAVE A REPLY