கேரளாவில் இயல்புநிலை திரும்பவும், மக்கள் இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமாக வாழவேண்டியும் ஸ்ரீசித்தர் பீடத்தில் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்புவழிபாடுகள் நடைபெற்றது.

24
கேரளா

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்புவழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
உலகமக்கள் நலமாக வாழவேண்டியும், தமிழகத்தில் இந்த வருடம் பருவமழை சிறப்பாக பெய்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில் வளங்களும் சிறக்கவேண்டியும், குறிப்பாக அண்டைமாநிலமான கேரளாவில் ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு இயல்புநிலைக்கு திரும்பிடவேண்டியும், மழைவெள்ளத்தால் இழந்த பொருட்களை மீண்டும் மக்கள் பெற்று வளமாக வாழ்ந்திடவேண்டியும், இதுபோன்ற இயற்கை பேரிடர் வேறு எந்தமாநிலத்திலும் நிகழ்திடாமல் இருக்கவேண்டியும் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய வழிபாடுகள் நடைபெற்றது. 


அதனைத்தொடர்ந்து, அன்னை, சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையுடன் கூடிய சிறப்புவழிபாடுகளும், பவுர்ணமி மஹா யாகமும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY