திமுக தலைவர் கருணாநிதிக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோட்ச தீபம்

12
சிதம்பரம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கடலூர் மாவட் டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நான்கு கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகம் முழு வதும் அவருக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வரு கின்றன. அந்த வகையில் கருணா நிதி மோட்சம் பெற வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம் (8-ம் தேதி) இரவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நான்கு கோபுரத்திலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தங்கள் பெயரை வெளிப்படுத் திக் கொள்ள விரும்பாத திமுக தலைவர் கருணாநிதியின் அபி மானிகள் சிலர், நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் அனுமதி பெற்று இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர்.

சைவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். பஞ்ச பூதங்களில் வான்வெளியை சிறப்பிக்கும் ஆகாயத் தலம் என்று போற்றப்படுகிறது. இக்கோயிலில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று 4 கோபுரங்கள் உள்ளன. யாரேனும் முக்கிய நபர்கள் இறந்தால் அவர்களுக்காக இந்த கோபுரங்களில் மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக நடந்து வருகிறது.

அதாவது இறந்த நாள், திதி நாள், நினைவு நாள்,10-வது நாள், 30-வது நாள் ஆகிய தினங்களில் இக்கோயில் கோபுரத்தில் உள்ள அகல் விளக்குகளில் பெரிய திரி போட்டு தீபம் ஏற்றினால், இறந்தவர்களின் ஆத்மா நற்கதி அடைந்து மோட்சம் கிட்டும் என்ற ஐதீகம். இதற்காக இந்த மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

சிலர் ஒரு கோபுரத்தில் மட்டும் மோட்ச தீபம் ஏற்றுவர், சிலர் நான்கு கோபுரங்களிலும் தங்களைச் சார்ந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவர். திமுக தலைவர் கருணாநிதிக்காக நேற்று முன்தினம் இரவில் 4 கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

LEAVE A REPLY