மத்திய அமைச்சரவையில் கருணாநிதிக்கு இரங்கல்- பிரதமர் தலைமையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி

15
அமைச்சரவை

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று இரங்கல் தெரிவித்தது.

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணா நிதி, கடந்த 7-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் கால மானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக ராஜாஜி அரங்கத் தில் வைக்கப்பட்டிருந்த கருணா நிதியின் உடலுக்கு பிரதமர் நரேந் திர மோடி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி மறைவையொட்டி நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப் பட்டது. மத்திய அரசு அலுவலகங் களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவை களும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக் கப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் நரேந் திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கருணாநிதி மறைவுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இரங்கல் தீர்மானத்தில், “சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார். அவரது மறைவுக்கு அமைச்சரவை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள் கிறது. அனைவராலும் அன்புடன் கலைஞர் என அழைக்கப்பட்ட அவரது மறைவால் மிக மூத்த, புகழ்பெற்ற ஒரு தலைவரை நாடு இழந்துவிட்டது.

குறிப்பாக புகழ்பெற்ற ஒரு தலைவரை தமிழக மக்கள் இழந்துள்ளனர். கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும் தமிழக மக்களுக்கும் மத்திய அரசு மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இதயபூர்வமான இரங்கலை அமைச்சரவை தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY