தூத்துக்குடி  மாநகராட்சியானது, மத்திய அரசால் “ஸ்மார்ட் சிட்டி” என அறிவிக்கப்பட்டுள்து

16
ஸ்மார்ட் சிட்டி

தூத்துக்குடி  மாநகராட்சியானது, மத்திய அரசால் “ஸ்மார்ட் சிட்டி” என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மின் ஆற்றல் சிக்கன நடவடிக்கையாக மாநகரின் எல்கையான எட்டையபுரம் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை மற்றும் மாநகரின் மையப் பகுதியான பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி. சிக்னல் முதல் 3வது மைல் பாலம் விரையிலான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ. 175.00 இலட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. லைட்டுகள் புதிதாக அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  எனவே மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்பட்டு மாநகரின் பிரதான பகுதிகள் ஒளிரும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென மாநகராட்சி      ஆணையர் (ம) தனி அலுவலர்  டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ், இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்தார்.

LEAVE A REPLY