ஸ்ரீசிவனைந்தப்பெருமாள் கோவில் 9-வது வருஷாபிஷேக விழா!

19

நாசரேத் ஜுலை.02:நாசரேத்அருகிலுள்ள வனத்திருப்பதி-புன்னைநகர் ஸ்ரீநிவாசபெருமாள் கோவில்-ஸ்ரீ ஆதிநாராயணர் கோவில்-ஸ்ரீ சிவனைந்தபெருமாள் கோவில் ஒன்பதாவது வருஷாபிஷேக விழா நேற்று காலையில் நடைபெற்றது.வருஷாபிஷேக விழாவில் பக் தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள வனத்திருப்பதி-புன்னைநகர் ஸ்ரீநிவாசபெருமாள் கோவில்-ஸ்ரீ ஆதிநாராயணர் கோவில்-ஸ்ரீ சிவனைந்த பெருமாள் கோவில் 9-வது வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்;கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர்ää உற்சவருக்கு சிறப்பு (அபிஷேகம்) திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.காலை 8:30 மணிக்கு காலசந்தி பூஜைääபகல் 11:30 மணிக்கு உச்சிகாலபூஜைääமாலை 5மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனைää மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது.
காலை 11:30 மணிக்கு மேல்; வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் கோவிந்தாää கோவிந்தா என்று விண்ணை பிளக் கும் அளவிற்கு கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். இதில் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ பரமஹம்ஸ ரெங்கராமானுஜஜீயர் என்ற எம்பெருமானார்சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சென்னை ஓட்டல் சரவண பவன் நிறுவன ரும்ääவனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாசபெருமாள்-ஸ்ரீ ஆதிநாராயணர் கோவில் நிறுவன ரும்ää நிரந்தர கைங்கரியதாரருமான பி.ராஜகோபால் மற்றும் அவரது மகன் பி.ஆர்.சர வணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாலை 6 மணிக்குமேல் மேள தாளத்துடன் கருட வாகனத்தில் உற்சவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருவீதிஉலா நடை பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஓட்டல் சரவண பவன் நிறுவனரும்ää வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாசபெருமாள்-ஸ்ரீ ஆதிநாராயணர் கோவில் நிறுவனரும்ää நிரந்தர கைங்கரியதாரருமான பி.ராஜகோபால் உத்திரவின்பேரில் கோவில் மேலாளர் டி.வசந்தன் செய்திருந்தார்.

LEAVE A REPLY