பேய்க்குளம் அருகே இரட்சணியப் பேழை ஊழியத்தின் புது வாழ்வு பெருவிழா!

56

பேய்க்குளம் அருகே இரட்சணியப் பேழை ஊழியத்தின் புது வாழ்வு பெருவிழா ஜுலை 6- ஆம்தேதி துவங்கி 8-ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

பேய்க்குளம் அருகிலுள்ள பழனியப்பபுரம் கர்த்தரின் தோட்டத்தில்  இரட்சணியப்பேழை ஊழியத்தின் சார்பில் புது வாழ்வு பெருவிழா கூட்டங்கள் ஜுலை  6-ஆம்தேதி வெள்ளிக்கிழமை துவங்கி 8-ஆம் தேதி ஞாயிறுகிழமை வரை நடைபெ றுகிறது. புதுவாழ்வு பெருவிழா கூட்டங்கள் தினமும் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகி றது. புதுவாழ்வுப் பெருவிழாவில் சகோ ஸ்டீபன் ஜெபராஜன் குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர். நாகர்கோவிலைச் சேர்ந்த சகோ.ஜி.இ.ஞானேஷ் தேவ செய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். கூட்டம் முடிந்ததும் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பு வாகன வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இரட்சணியப் பேழை ஊழிய ஸ்தாபகர் சகோ. எஸ்.பால்ராஜ் ஜேசுதாஸ் தலைமையில் ஊழிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY